For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Manjolai விவகாரம் | 4 நாட்கள் விசாரணையை தொடங்கியது தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

10:15 AM Sep 18, 2024 IST | Web Editor
 manjolai விவகாரம்   4 நாட்கள் விசாரணையை தொடங்கியது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
Advertisement

மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நான்கு நாட்கள் விசாரணை இன்று தொடங்கியது.

Advertisement

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தேசிய மனித உரிமைகள் ஆணைய பொறுப்பு தலைவர் மற்றும் ஆணையத்தின் நீதிபதி விஜயா பாரதி சயானியை கடந்த 20ஆம் தேதி நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார். புதிய தமிழகம் கட்சி முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், மனித உரிமை ஆணைய விசாரணை பிரிவின் தலைமை இயக்குநர் அடங்கிய அதிகாரிகளை கொண்ட குழுவை நியமித்துள்ளது.

இந்நிலையில், மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் 4 நாட்கள் விசாரணை இன்று தொடங்கியது. தேசிய மனித உரிமை ஆணைய டிஎஸ்பி ரவி சிங் மற்றும் ஆய்வாளர் யோகிந்தர குமார் திருபாதி ஆகியோர் மாஞ்சோலை விவகாரத்தில் விசாரணை மேற்கொள்கிறார்கள். முதற்கட்டமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வருவாய் துறை அதிகாரிகள்,வனத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதையும் படியுங்கள் : Crime | 7 அடி சுவர் தாண்டி குதித்து கைவரிசை காட்டிய 70 வயது முதியவர்! என்ன செய்தார் தெரியுமா?

மாஞ்சோலை விவகாரம் தொடர்பான சம்பவங்கள் குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடைபெற்றது. தொடர்ந்து மாஞ்சோலை பகுதியில் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர்.

Tags :
Advertisement