For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘தலைவர் 171’ படத்தின் பெயர் இதுவா? Vintage ரஜினிகாந்தை திரையில் காட்டுவாரா லோகேஷ்?

08:23 PM Mar 31, 2024 IST | Web Editor
‘தலைவர் 171’ படத்தின் பெயர் இதுவா  vintage ரஜினிகாந்தை திரையில் காட்டுவாரா லோகேஷ்
Advertisement
தலைவர் 171 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள், ரஜினியை மீண்டும் ஒரு மாஸ் லுக்கில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். தலைவர் 171 இல் ரஜினியின் பாத்திரம் எப்படி இருக்கும் என்று யூகங்கள் உள்ளன. இந்த படத்தில், ரஜினிகாந்த் மாஃபியா டான் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கக் கடத்தலை பின்னணியாக வைத்து இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ் என கூறப்படுகிறது. சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் எப்படிக் கடத்தப்படுகிறது என்பதை மையமாக வைத்து ‘தலைவர் 171’ படம் உருவாகும் எனத் தெரிகிறது.

இந்த படத்தின் ஏப்.22ஆம் தேதி பெயர் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஜினி - 171 படத்திற்கு ‘கழுகு’ எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், பான் இந்திய திரைப்படமாக இது உருவாகும் என்பதால், படத்தின் பெயரை ஆங்கிலத்தில் வைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளார்.

Tags :
Advertisement