For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசித்த இசைக்கலைஞர்...!

08:26 PM Jan 24, 2024 IST | Web Editor
அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசித்த இசைக்கலைஞர்
Advertisement

 மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றிய போது இசைக்கலைஞர் ஒருவர் கிட்டார் வாசித்து கொண்டே சிகிச்சைக்கு உட்பட்டது குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisement

கிறிஸ்டியன் நோலன் என்ற இசைக்கலைஞர் மூளை கட்டி பாதிப்பால் அவதி அடைந்து வந்துள்ளார். இதையடுத்து நோலன் என்பவர் அமெரிக்காவில் உள்ள சில்வர்ஸ்டர் புற்று நோய் மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர் குழுவினர் இவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்; கிரிக்கெட் விளையாடிய புளூஸ்டார், சிங்கப்பூர் சலூன் படக்குழுவினர்!

இந்நிலையில், அறுவை சிகிச்சையின் போது நோலன் கண் விழித்திருப்பது அவசியம் என மருத்துவர்கள் கருதினர். இதுகுறித்து நோலனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நோலன் அறுவை சிகிச்சையின் போதும் கிட்டார் வாசிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த போதே நோலன் கிட்டார் வாசித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அறுவை சிகிச்சைக்கு பின் நோலன் கூறியதாவது,

"மீண்டும் சுறுசுறுப்பாக இருக்க முடிந்தது, இது என் வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியாகும். இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது, மீண்டு வந்தது போன்றது,” என்று நோலன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது வாழ்க்கையைப் பற்றி கூறினார்.

அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் ரிக்கார்டோ கொமோட்டர் கூறுகையில்,"நோயாளியை விழித்திருந்து, கட்டியை வெளியே எடுக்கும்போது கிட்டார் வாசிப்பது, ஆச்சிரியமான செயல். அறுவை சிகிச்சை நிபுணர் இந்த முழு செயல்முறையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே. அற்புதமான நரம்பியல் மயக்கவியல் நிபுணர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், இல்லாமல் இது சாத்தியமில்லை, ”என்று கொமோட்டர்  கூறினார்.

Tags :
Advertisement