பட வாய்ப்பு இல்லாததால் ஜோசியரான பிரபல படத்தின் இசையமைப்பாளர்!
பிரபல காதல் படத்தின் இசையமைப்பாளர் பட வாய்ப்பு இல்லாததால் ஜோசியராக மாறியுள்ளேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
காதல் திரைப்படம் 2004 ஆம் ஆண்டில் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படமானது அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றது. மேலும் தென்னிந்திய திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதான பில்ம்ஃபேர் விருது பிரிவில் 2004 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட விருது வாங்கியது.
இந்த படத்தின் மூலம் தான் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைப்பாளராக அறிமுகமானார். காதல் படத்தை தொடர்ந்து கல்லூரி, வெப்பம், ஒரு குப்பை கதை போன்ற படங்களுக்கு இசை அமைத்தார். அதன் பிறகு திடீரென மாயமானர். தற்போது வரை இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் 2 வருடங்கள் ஜோசியம் சொன்னதாக தற்போது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த பேட்டியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2020ல் இசையமைப்பதை நிறுத்தினேன்.15 வருடங்களாக வருமானத்துக்காக இசையமைத்தேன். எனக்கு பிடிக்காத படங்களுக்கு இசையமைக்கிறேனே என்ற வருத்தத்தில் , கடந்த 5 ஆண்டுகளாக இசையமைக்கவில்லை. அந்த நேரத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் எனக்கு சிறு வயதில் இருந்தே ஜோதிடத்தின் மீது ஆர்வம் இருந்தது. ஊரடங்கில் வெறும் 6 மாதங்களில் ஜோதிடம் கற்றுக்கொண்டேன். தற்போது இதிலிருந்து எனக்கு வருமானம் வருகிறது என அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளர்.