வரலாறு காணாத உச்சம் தொட்ட மும்பை பங்குச்சந்தை!
நிதித்துறை பங்குகளின் உயர்வால் இந்திய பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே அதிகரித்த சென்செக்ஸ் இறுதிநேரத்தில் 712 புள்ளிகள் உயர்வுக்கு 78,053 என்ற நிலையிலும், நிப்டி 183 புள்ளிகள் உயர்வில் 23,721 என்றளவிலும் முடிவடைந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 15 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. ஆக்சிஸ் வங்கி பங்கு 3.4%, ஐசிஐசிஐ வங்கி 2.4%, எச்டிஎஃப்சி வங்கி பங்கு 2.3% விலை உயர்ந்து வர்த்தகமாயின. டெக் மகிந்திரா பங்கு 1.8%, எல் அன்ட் டி பங்கு 1.5%, பஜாஜ் பின்செர்வ், எஸ்.பி.ஐ. பங்குகள் 1% விலை உயர்ந்தன.
ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ்., கோட்டக் மகிந்திரா, அல்ட்ரா டெக் சிமென்ட் பங்குகளும் விலை அதிகரித்தன. பவர்கிரிட், ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், நெஸ்லே, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 197.65 புள்ளிகள் அதிகரித்து 23,735 புள்ளிகளை தொட்டு சாதனை. வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 183 புள்ளிகள் உயர்வுடன் 23,721 புள்ளிகளில் நிறைவடைந்தது.
சந்தை வல்லுநர்களின் கருத்துப்படி, ரியல் எஸ்டேட், பவர், மெட்டல்ஸ் மற்றும் மிட்கேப் துறைகளிலும் இலாபம் கிடைத்துள்ளது. வருகிற பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு காரணமாக சந்தை முன்னேற்றத்தை அடைந்துவருவதாகவும் பருவமழை காலமும் சந்தையின் மாற்றங்களுக்கு காரணமாகும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
வங்கி மற்றும் நிதித் துறைகளின் பங்கு வளர்ச்சியால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 0.03 பைசா அதிகரித்து 83.45 என வர்த்தமாகியது.