For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உச்சநீதிமன்றத்தில் திரையிடப்படும் ’லாபதா லேடீஸ்' திரைப்படம்!

01:02 PM Aug 09, 2024 IST | Web Editor
உச்சநீதிமன்றத்தில் திரையிடப்படும் ’லாபதா லேடீஸ்  திரைப்படம்
Advertisement

உச்சநீதிமன்றத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாலின சமத்துவத்தை பேசுபொருளாக கொண்டு வெளியான ’லாபதா லேடீஸ்' திரைப்படம் இன்று உச்சநீதிமன்றத்தில் திரையிடப்பட உள்ளது.

Advertisement

இந்திய உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினர்கள் பங்கேற்கும் திரைப்பட திரையிடல் நடைபெற இருப்பதாக உச்சநீதிமன்ற நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அமீர் கான், கிரண் ராவ், கோதி தேஷ்பாண்டே ஆகியோர் தயாரிப்பில் பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம்  உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ‘லாபதா லேடீஸ் ‘. இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரே ரயிலில் பயணம் செய்யும் புதிதாக திருமணமான இரண்டு பெண்கள் தவறுதலாக வெவ்வேறு இடங்களுக்கு சென்று விடுவதால் ஏற்படும் குழப்பங்களும், அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளுமே இப்படம்.

எளிமையான ஒரு கதையின் வழியாக கிராமப் புறங்களில் பெண்கள் ஒடுக்கப்படும் விதம், அவர்களின் உணர்ச்சிகள், முன்னேற்றத்துக்கான வேட்கை, சமத்துவம் மற்றும் காதலை மிக அழகாக இப்படத்தில் பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார் கிரண் ராவ்.

உச்ச நீதிமன்றத்தில் உள்ள அட்மினிஸ்ட்ரேடிங் பில்டிங் காம்ப்ஸில் அமைந்துள்ள ஆடிட்டோரியத்தில் இன்று லாபதா லேடீஸ் திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.

Tags :
Advertisement