Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

6 கதைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘எப்புரா’ திரைப்படம் | ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி...!

07:41 AM Feb 11, 2024 IST | Web Editor
Advertisement

6 கதைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘எப்புரா’ திரைப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.  

Advertisement

ஓர் இரவில் நடக்கும் கதையை நகைச்சுவை கலந்த ஹைபர் லிங்க் மூலமாக 'எப்புரா' என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை இரண்டாம் தயாரிப்பில் வெளியிடுகிறது.

அறிமுக இயக்குநர் A.R.ராஜேஷ் இப்படத்தினை இயக்குகிறார். படத்தில் கதாநாயகனாக விஜய் முருகன் நடித்துள்ளார் இவர் முதல் படமான "சேயோன்" என்ற திரைப்படம் உலகளவில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். மற்றும் இரண்டாம் கதாநாயகனாக பிரதீப் செல்வராஜ் நடித்துள்ளார். கதாநாயகியாக நத்தோஷயா, ஜூடோ, கலையரசி, வில்லனாக ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டனர்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 2 பாடல்கள் ஏற்கன்ஏ வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், வரும் 20ஆம் மூன்றாம் பாடல் Zee music.co யூடியூப் சேனலில் வெளியாகும் என ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement
Next Article