Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காதலை கைவிட மறுத்த மகளை கொல்ல ஆள் அமர்த்திய தாய்! கடைசியா நடந்ததுதான் ட்விஸ்ட்!

08:44 PM Oct 12, 2024 IST | Web Editor
Advertisement

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மகள் காதலிப்பதைப் பிடிக்காமல் அவரை கொலை செய்ய தாயே காசு கொடுத்து ஒருவரை ஏற்பாடு செய்த நிலையில், அந்த நபரால் தாயே கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் ஏதா மாவட்டத்தில் வசித்து வந்தவர் 42 வயதான அல்கா தேவி. இவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். தனது மகள் யாருடனோ காதலில் இருப்பதை சகித்துக்கொள்ள முடியாமல் மகளைக் கொலை செய்ய சுபாஷ் என்ற நபரை ரூ. 50,000 காசு கொடுத்து ஏற்பாடு செய்துள்ளார் அல்கா. இதற்கிடையே தனது மனைவி அல்கா வீட்டுக்கு வரும் வழியில் காணாமல் போனதாக அவரது கணவர் ராம்காந்த் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கழுத்து நெரிக்கப்பட்டு அல்கா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸ் நடத்திய விசாரணையில் உண்மை வெளியே வந்துள்ளது. அதில், தனது மகளை கொல்ல அல்கா சுபாஷ் என்ற நபரை நியமித்திருந்ததும் அதே சுபாஸ் மகளுக்கு பதிலாக பணம் கொடுத்து கொலை செய்ய சொன்ன அல்காவையே கொன்றுள்ளதும் தெரியவந்தது. ஆனால் சுபாஷ் ஏன் அல்காவை கொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அதன் காரணமும் தெரியவந்துள்ளது. அதாவது, அல்காவின் மகளை காதலித்து வந்ததே சுபாஷ்தான். இதுதெரியாமல் மகளை கொல்ல சுபாஷுக்கு அல்கா பணம் கொடுத்துள்ளார். எனவே சுபாஷும் அல்காவின் 17 வயது மகளும் சேர்ந்து திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர். அல்காவின் மகளை கொலை செய்துவிட்டதுபோல் பொய்யாக புகைபடங்களை எடுத்து அதை தாய் அல்காவுக்கு அனுப்பி வைத்து மேலும் அதிக பணம் கேட்டுள்ளார் சுபாஷ்.

இதுதொடர்பாக பேச சுபாஷை சந்திக்க அல்கா நேரில் வந்த நிலையில் அல்காவின் மகள் மற்றும் சுபாஷ் இருவரும் சேர்ந்து, அல்காவை ஊருக்கு ஒதுக்குபுறமான விவசாய நிலத்துக்கு கடத்திச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். இந்த உண்மைகள் அனைத்தும் தற்போது வெளிவந்துள்ள நிலையில் அல்காவின் மகளும் சுபாஷும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags :
arresteddaughterEtahjailkidnappedmothernews7 tamiluttar pradesh
Advertisement
Next Article