Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரபல ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் எது தெரியுமா?

12:18 PM Aug 21, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் இந்தாண்டு வெளியான திரைப்படங்களில், ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை மகாராஜா படைத்துள்ளது. 

Advertisement

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் மகாராஜா. இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது.

விஜய் சேதுபதியின் 50- வது திரைப்படமான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கும் ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்தது. திரையரங்குகளிலேயே வசூல் ரூ.100 கோடியை தாண்டியது. இதனைத்தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த ஜூலை 12ஆம் தேதி வெளியானது. இதிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்தியப் படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா முதலிடத்தில் உள்ளது. 1.86 கோடி பார்வையாளர்களை பெற்று மகாராஜா முதலிடத்தில் உள்ளது.

Tags :
MaharajaNetflixNithilan SaminathanottVijay sethupathi
Advertisement
Next Article