For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் முறைப்படி நடை பெறவில்லை”- திருச்சி சிவா குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் முறைப்படி நடைபெறவில்லை என தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
04:38 PM Aug 21, 2025 IST | Web Editor
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் முறைப்படி நடைபெறவில்லை என தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
”நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் முறைப்படி நடை பெறவில்லை”  திருச்சி சிவா குற்றச்சாட்டு
Advertisement

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கியது.  இந்த கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.இந்த  நிலையில் தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

Advertisement

”நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் முறைப்படி நடை பெறவில்லை. அவசரகதியில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது நடைபெற உள்ள பீகார் தேர்தலுக்கு முன்தாகவே வரலாற்று காணாத அளவுக்கு சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது பெரும்பாலும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான வாக்குகள் ஆகும். இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு மத்திய அரசு முன்வரவில்லை. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் , அதனை தேர்தல் ஆணையம் மதிக்கவில்லை

உலகில் தலை சிறந்த ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியா தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. தேர்தல் ஆணையம் தன்னாட்சியாக செயல்பட வேண்டியவை, ஆனால் தற்போது யார் கையில் உள்ளது என்று கேள்வி எழுகிறது. தேர்தல் ஆணையர் தொடர்பான விதிகளை மாற்றியதன் மூலம் மத்திய அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்ற அச்சம் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் எழுப்போம் சந்தேகங்களுக்கு மத்திய அரசு பதிலளிப்பதில்லை.

ஒரு மாநிலத்தின் முதல்வர் அல்லது அமைச்சர்கள், பிரதமர் உள்ளிட்டோர் குற்றச்சாட்டில் ஒரு மாதம் சிறையில் இருந்தாலே அவர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா நிறைவேற்றி உள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒட்டுமொத்தமாக இந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் , எதிர்க்கட்சிகளை புறக்கணித்து மத்திய அரசுக்கு சாதகமாக நடத்தப்பட்டுள்ளது.

பல்வேறு மசோதாக்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பேச முற்பட்டபோது , எதிர்க்கட்சிகளின் குரல்கள் நெறிக்கப்படுகிறது.எதிர்காலத்தில் இந்த சட்டங்கள் மூலம் வரும் அபாயங்களை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் போராடுகின்றன. மத்திய அரசு மசோதாக்கள் நிறைவேற்றி உள்ளது. ஆனால் அது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

இதற்கு முன் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுகளில் சில மாநில முதல்வர்கள் கைது செய்யப்பட்டனர்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை குற்றச்சாட்டுகள் மூலம் கைது செய்யும் நிலைதான் இந்த மசோதா உருவாக்கி உள்ளது.மத்திய அரசின் இந்த புதிய மசோதா கூட்டு நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பப்பட்டாலும், அதன் தலைவராக ஆளும் அரசின் ஒருவர் இருப்பார். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, இது எதிர்க்கட்சிகள் தலைவர்கள் மீது கடுமையாக பயன்படுத்தப்படும் என்பது சந்தேகம் இல்லை.எதிர்க்கட்சிகளின் மீது கடுமையான அடக்குமுறையை அவிழ்த்துவிடவே புதிய பதவி நீக்க மசோதா கொண்டுவரப்படுள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆளும் கட்சி மசோதாக்களை இது போன்று தொடர்ந்து நிறைவேற்றி செல்வதால் ஜனநாயகம் கேள்விக்குறியாக மாறி உள்ளது”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement