For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கல்கி படத்தில் நடிகர் பிரபாஸ் பயன்படுத்திய புஜ்ஜி எனும் நவீன கார் - சென்னையில் ஆச்சர்யத்தோடு பார்வையிட்ட பொதுமக்கள்!

07:01 AM May 29, 2024 IST | Web Editor
கல்கி படத்தில் நடிகர் பிரபாஸ் பயன்படுத்திய புஜ்ஜி எனும் நவீன கார்   சென்னையில் ஆச்சர்யத்தோடு பார்வையிட்ட பொதுமக்கள்
Advertisement

நடிகர் பிரபாசின் கல்கி 2898 AD. திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட புஜ்ஜி என்ற
நவீன கார் பொதுமக்கள் பார்வைக்காக செங்கல்பட்டு மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில்
வைக்கப்பட்டிருந்தது.

Advertisement

நடிகர் பிரபாஸ் நடிக்கும் கல்கி திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட புஜ்ஜி என்ற
நவீன கார் பொதுமக்கள் பார்வைக்காக செங்கல்பட்டில் உள்ள மகேந்திரா வேர்ல்டு
சிட்டியில் வைக்கப்பட்டிருந்தது. இந்த புஜ்ஜி காரின் மதிப்பு 8 கோடியன
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன், பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் ஆகிய பெரிய நடிகர்கள் நடித்து
வரும் திரைப்படம் கல்கி 2898 AD. இந்தத் திரைப்படத்திற்காகவே பிரத்தியேகமாக
ஒரு காரை உருவாக்கியிருக்கிறது படக்குழு. படத்தின் ஹீரோவான பிரபாஸ்
பயன்படுத்துவதற்காக இந்தக் கார் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்து வரும் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் கல்கி 2898
AD. இத்திரைப்படத்தின் கதை எதிர்காலத்தில் நடப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப பிரபாஸ் பயன்படுத்தும் ரோபாட் கார் ஒன்றை சமீபத்தில் அப்படக்குழு அறிமுகம் செய்தது. மேலும், அந்த காரின் அறிமுக வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த புஜ்ஜி காருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.

கல்கி திரைப்படத்தில் வெறும் காராக, ஒரு பொருளாக மட்டுமில்லாமல் ஒரு
கதாபாத்திரமாக அதனை வடிவமைத்திருக்கிறார் கல்கி படத்தின் இயக்குநர் நாக்
அஷ்வின். இந்தக் காரை வடிவமைக்க இயக்குனர் நாக் அஸ்வின் மகேந்திரா குழுமத்தின்
தலைவர் ஆனந்த் மகேந்திராவை அணுகியுள்ளார். அதன் பின்னர் இந்த கார் மஹிந்திரா குழுமத்தின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் சென்னையில் உள்ள மஹிந்திரா ரிசர்ச் வேலியிலேயே அந்தக் கார் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த காரை கோவையை சேர்ந்த ஜெயம் ஆட்டோமொட்டிவ் நிறுவனம் அசெம்பிள்
செய்துள்ளது. வழக்கமான காரை விட இந்தக் புஜ்ஜி எனப்படும் இந்த கார் உருவத்தில் பெரிதாக உள்ளது. இந்தக் காரின் எடை சுமார் 6 டன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கார் மின்சாரத்தில் இயக்கக் கூடியது. இந்தக் காரின் மதிப்பு எட்டு கோடி என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மகேந்திரா கோல்ட் சிட்டியில் வைக்கப்பட்டிருந்த அந்த காரை மக்கள்
ஆர்வத்துடன் கண்டுகளித்தனர் இந்த புஜ்ஜி காரின் அருகில் சென்று மக்கள்
ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Tags :
Advertisement