Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கடலோர பகுதியில் ஏற்பட்ட திடீர் சூறாவளி | பீச் பக்கம் போகாதீங்க! - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

06:55 AM May 04, 2024 IST | Web Editor
Advertisement

தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் சூறாவளி காற்று  இன்றும் நாளையும் வீசும் என்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Advertisement

தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதன் தொடர்ச்சியாகத் தென் தமிழக கடல் பகுதியில் கடல் சீற்றமாகக் காணப்படும். சனிக்கிழமை அதிகாலை 2.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி வரை கடல் அலைகள் அரை மீட்டர் முதல் 1½ மீட்டர் உயரம் வரை எழும்.

இதனால் பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதையும், கடற்கரை பூங்காக்களில் நடமாடுவதையும், கடலோர மீனவ கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மீனவர்கள் தங்கள் படகுகளைக் கடற்கரையிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் படகுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவ கிராமங்களுக்குக் கடல் சீற்றம் குறித்து எச்சரிக்கை விடுத்து உள்ளனர். கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும். கடற்கரையோர மீனவ மக்கள் பாதுகாப்பாக, விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அனைத்து மீனவ கிராமங்களுக்கும் தெரிவித்து உள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags :
AlertCoastalcyclonicMeteorological DepartmentSouth Andhra Pradeshwarning
Advertisement
Next Article