"கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலார்.." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
கடலூர் மாவட்டம், மருதூர் கிராமத்தில் 1823-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி வள்ளலார் பிறந்தார். அவர் சுத்த சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை தொடங்கி அதன் கொள்கைகளைப் பரப்பி வந்தார். மேலும் வடலூரில் சத்திய ஞான சபையில் தரும சாலையையும் தொடங்கினார். தரும சாலையில் உணவு தயாரிக்கப்பட்டு ஏழை, எளிய ஆதரவற்றோருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வள்ளலாரின் பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்.. என, பசியற்ற மனிதர்களைக் காணும் கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாளான இந்த தனிப்பெருங்கருணை நாளில், அவர் கூறிய “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்ற உயர்ந்த நிலை அனைத்து உள்ளங்களிலும் நிலைநிற்கட்டும்!"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.