"வரி முறைகேட்டிற்கு முழு பொறுப்பேற்று மேயர் பதவி விலக வேண்டும்" - செல்லூர் ராஜு!
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது "மதுரை மாநகராட்சி வரி முறைகேட்டில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அதிமுக பெற்று தந்துள்ளது. சொத்து வரி முறைகேட்டில் அதிமுக மட்டுமே முழுமையாக போராடியது. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொத்து வரி முறைகேட்டில் வெற்று கம்பை சுற்றி வருகிறது.
மனைவி மேயர் பதவியில் இருந்ததால் பொன் வசந்த் வரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மாநகராட்சி வரி முறைகேட்டிற்கு முழு பொறுப்பேற்று மேயர் இந்திராணி பதவி விலக வேண்டும். மேயர் பதவி விலகும் வரை அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாமன்ற கூட்டங்களில் பங்கேற்காது.
மதுரை மாநகராட்சியில் ஊழல் பெருக்கெடுத்து உள்ளதால் வளர்ச்சிப் பணிகள் பின்னோக்கி சென்றது. வரி முறைகேட்டில் ஈடுபட்டவரின் மனைவி மேயராக இருக்கும்போது மக்கள் பிரச்சனையை அவரிடம் எப்படி பேச முடியும்? ஊழலை இந்திராணி இடம் மக்கள் பிரச்சினைகளை பேசினால் மேலும் ஊழலுக்குத்தான் வழிவகுக்கும். மதுரை மாநகராட்சி வரி முறைகேட்டில் 28 கோடியே 21 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.