Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இணையத்தில் வைரலாகும் #MarkZuckerberg கடிகாரம்! விலை எவ்வளவு தெரியுமா?

03:13 PM Sep 03, 2024 IST | Web Editor
Advertisement

மார்க் ஜூக்கர்பெர்க் அணிந்துள்ள கடிகாரம் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க். 40 வயதான மார்க், இணையத்தில் பதிவுகளை பகிர்வதில் அதிக ஆர்வம் காட்டுவார். அதனுடன் அவர் மற்றவர்களின் இடுகைக்கும் பதிலளிப்பார். அவ்வப்போது அவரின் பதிவுகளால்  மார்க் ஜூக்கர்பெர்க் பேசுபொருளாக இருப்பார். அவ்வாறு அவர் பதிவிட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

மார்க் ஜூக்கர்பெர்க் தனது மனைவி பிரிசில்லா சானுடன் எடுத்துக்கொண்ட  செல்ஃபி ஒன்றை இணையத்தில் பகிர்ந்தார். இதில் அவர்களை விட மார்க் ஜூக்கர்பெர்க் அணிந்திருந்த கடிகாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுள்ளது. அவர் நீல நிற டயலில் பிளாட்டினம் பெல்ட் கொண்ட கடிகாரத்தை அணிந்திருந்தார். அதன் விலை 141,400 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.18 கோடி). மார்க் ஜூக்கர்பெர்க்கின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் மார்க் ஜூக்கர்பெர்க் கலந்துகொண்டபோது , ​​ரிச்சர்ட் மில்லே சேகரிப்பில் இருந்து கடிகாரத்தை அவர் பாராட்டினார். அவர் அம்பானியிடம், "இந்த கடிகாரம் அருமையாக உள்ளது" என்று கூறினார். மார்க் ஜூக்கர்பெர்க் கடிகாரங்களை விரும்புவதாக தெரியவில்லை. அவர் அம்பானியின் விலையுயர்ந்த உடைமையைப் பார்த்த பிறகு அவர் தனது தொனியை மாற்றி கொண்டார் என இணைய வாசிகள் கூறி வருகின்றனர்.

Tags :
Mark ZuckerbergtrendingViralWatch
Advertisement
Next Article