For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீசிய நபர் போலீசாரால் கைது!

09:44 AM Feb 23, 2024 IST | Web Editor
வி கே பாண்டியன் மீது தக்காளி வீசிய நபர் போலீசாரால் கைது
Advertisement

ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டத்தில் 5டி திட்டத்தின் தலைவர் வி.கே பாண்டியன் மீது தக்காளி வீசிய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Advertisement

ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது.  இந்த ஆட்சியின் 5டி என்ற திட்டத்தின் தலைவர் பதவியில் வி.கே. பாண்டியன் என்ற தமிழர் உள்ளார்.  இவர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் முதன்மை ஆலோசகராக பணியாற்றிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

ஒடிசாவில் குழுவாக பணியாற்றுதல்,  வெளிப்படை தன்மை, தொழில் நுட்பம் உள்ளிட்ட 5 காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த 5டி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்  தலைவர் பதவி வி.கே. பாண்டியனுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள் : மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது அதீத அழுத்தம் இருக்கும்! – பார்த்திவ் படேல் கருத்து

இந்நிலையில்,  ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பெல்லாகுந்தா பகுதியில் நடந்த பொது கூட்டத்தில்  வி.கே. பாண்டியன்  கலந்து கொண்டார்.  அப்போது, அவரை நோக்கி தக்காளி வீசப்பட்டு உள்ளது.  இதையடுத்து, வி.கே. பாண்டியன் மீது தக்காளி வீசப்பட்ட சம்பவம் பொது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் தக்காளி வீசியவரை சுற்றியிருந்தவர்கள் சூழ்ந்து கொண்ட நிலையில்,  இந்த நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  அங்கு இருந்த போலீசார் அவரை மீட்டு, கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Tags :
Advertisement