சொகுசு காரிலிருந்து பணத்தை அள்ளி வீசிய நபர்.... போலீசார் என்ன செய்தார்கள் தெரியுமா?
சொகுசு காரிலிருந்து பணத்தை வீசிய நபரின் மீது நொய்டா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த ஆண்டு ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா நகரில் அமைந்துள்ள வெஸ்ட் சைட் மாலுக்கு வெளியே மணி ஹெய்ஸ்ட் இணைய தொடரில் வரும் கதாபாத்திரத்தை போல் முகமூடி அணிந்த இளைஞர் ஒருவர் 10-20 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசி சென்றார். அவற்றை எடுப்பதற்காக மக்கள் கூட்டம் சாலையில் திரண்டது. இதனால் அங்கு சுமார் 20 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து அமைதியை குலைத்த குற்றச்சாட்டின் பேரில் சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சொகுசு காரான, ரேஞ்ச் ரோவரில் இருந்து பணத்தை வெளியில் வீசிய நபரின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
இதனைத் தொடர்ந்து, நொய்டா போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், சீ ட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கில் அந்த நபருக்கு அபராதம் விதித்துள்ளனர். நொய்டா போக்குவரத்து காவல்துறையினர் அபராததிற்கான சலானை, வெளியிட்டுள்ளனர்.
उक्त शिकायत का संज्ञान लेते हुए संबंधित वाहन के विरुद्ध यातायात नियमों का उल्लंघन करने पर नियमानुसार ई-चालान (जुर्माना 21000/- रुपए) की कार्यवाही की गई है।
यातायात हेल्पलाइन नं0- 9971009001 pic.twitter.com/Mi37WrF6uX— Noida Traffic Police (@noidatraffic) February 22, 2024