'நேசிப்பாயா' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!
விஷ்னு வரதன் இயக்கத்தில் உருவாகியுள்ள நேசிப்பாயா படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் திரைப்படம் நேசிப்பாயா. இப்படத்தை விஷ்னு வரதன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். இதில் ஆகாஷ் முரளி உடன் பிரபு, சரத்குமார், குஷ்பு சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் பொங்கள் வெளியீடாக ஜன.14 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்புப் பாடல் எப்படி உருவானதென என இயக்குனர் விஷ்னு வரதன், பாடலாசிரியர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து பேசும் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. இந்த நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.