For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேப்டன் மில்லர்  திரைப்பட killer killer பாடலின் லிரிகல் வீடியோ வெளியாகி வைரல்!!

10:40 PM Nov 22, 2023 IST | Web Editor
கேப்டன் மில்லர்  திரைப்பட killer killer பாடலின் லிரிகல் வீடியோ வெளியாகி வைரல்
Advertisement

கேப்டன் மில்லர்  திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் killer killer பாடலின் லிரிகல் வீடியோ வெளியானது.

Advertisement

அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் தனுஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருந்தனர். அதிரடி காட்சிகளால் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், யூடியூப்பில் 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இப்படம் வருகிற டிச.15 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்படுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் தனுஷ் பாடியிருந்த ‘கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்’ பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பாடலை கபேர் வாசுகி எழுதியுள்ளார்.

Tags :
Advertisement