”சிறு பொன்மணி அசையும்” - பழைய நினைவுகள், பாடல்கள்... பாரதிராஜாவுக்கு கங்கை அமரன் அளித்த மென்மையான ஆறுதல்!
இயக்குநர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய இசையமைப்பாளர் கங்கை அமரன்...
04:46 PM Apr 03, 2025 IST | Web Editor
Advertisement
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் உயிரிந்தார். இவரது மறைவு திரையுலகினர், ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. முதலமைச்சர் ஸ்டாலின், விஜய் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
மகனை இழந்து வாடும் இயக்குநர் பாரதிராஜாவிற்கு பலரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் பாரதிராஜாவை நேரில் சந்தித்து, இருவருக்கும் இடையேயான பழைய நினைவுகளைப் பகிர்ந்து அவரை ஆறுதல்படுத்தினார்.
பாரதிராஜா படங்களில் தான் பாடிய பாடல்களை பாடிகாட்டி அவரை ஆசுவாசப்படுத்தினார். இதை அமைதியாகக் கேட்டபடி பாரதிராஜா அமர்ந்திருந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.