For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“உலகை ஆளப்போகும் சிங்கப்பெண்!” - மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பஜ்ரங் புனியா புகழாரம்!

09:39 PM Aug 06, 2024 IST | Web Editor
“உலகை ஆளப்போகும் சிங்கப்பெண் ”   மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பஜ்ரங் புனியா புகழாரம்
Advertisement

இந்தியாவில் தோற்று உலகை ஆளப்போகும் சிங்கப்பெண் என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பஜ்ரங் புனியா புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் வினேஷ் போகத் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். சர்வதேசப் போட்டியில் உலகின் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் மல்யுத்த வீராங்கனை யூ சுசாகியை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற வரலாற்று பெருமையைப் பெற்றார்.

இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின் யூ சுசாகியை வீழ்த்தினார். வினேஷ் போகத், தற்போது முன்னாள் சாம்பியனான ஒக்ஸானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதுகுறித்து இந்திய மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில் கூறியதாவது:

“வினேஷ் போகத் இன்று நடந்த போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று இந்தியாவின் சிங்கப் பெண்ணாக உருவெடுத்துள்ளார். 4 முறை உலகச் சாம்பியன், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனையும் தோற்கடித்துள்ளார். காலிறுதியில் முன்னாள் உலகச் சாம்பியனையும் தோற்கடித்தார். ஆனால், ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தப் பெண் தன் சொந்த நாட்டிலேயே அடித்து உதைக்கப்பட்டு, தெருக்களில் தரத்தரவென இழுத்துச் செல்லப்பட்டார். இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பெண் மல்யுத்த வீராங்கனைகள், பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நாட்டின் முக்கிய மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் தில்லி ஜந்தர் மந்தர் சென்று போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement