Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உலகையே மிரள வைத்த சிங்கப்பெண்... யார் இந்த வினேஷ் போகத்?

10:12 AM Aug 07, 2024 IST | Web Editor
Advertisement

பாரிஸ் ஒலிம்பக்கில் மல்யுத்தப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற வினேஷ் போகத் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

Advertisement

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு இதுவரை தங்கம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தை போக்குவதற்கு நீரஜ் சோப்ர ஒருபுறம் விளையாடிகொண்டிருக்க, மல்யுத்தத்தில் தங்கத்திற்கு மிக அருகில் நெருங்கி தேசத்திற்கு பெருமையை சேர்த்து உள்ளார் வினேஷ் போகத்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கி, ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு சாதனை படைத்துள்ளார். ஜப்பானைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை உள்பட 3 வீராங்கனைகளின் சவாலை முறியடித்த வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கத்தை முத்தமிட காத்திருக்கிறார்.

முதலில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின் யு சுசாகியை வினேஷ் போகத் தோற்கடித்தார். பின்னர் காலிறுதியில் உக்ரைன் நாட்டின் மல்யுத்த வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். இது முக்கியமான வெற்றியாக கருதப்படுகிறது. காரணம் உலகின் நம்பர் 1 வீராங்கனையும், 4 முறை உலக சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரும் மற்றும் தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையாக இருக்கும் ஜப்பானின் யு சுசாகியை இந்திய வீராங்கனை வீழ்த்தியிருப்பது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் வினோத் போகத்.

பாலிவுட் திரைப்படம் 'தங்கல்' திரைப்படத்திற்கும் வினேஷ் போகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மல்யுத்த வீராங்கனைகளான கீதா, பபிதாவின் உண்மை கதை தான் 'தங்கல்' திரைப்படம். அந்த திரைப்பட நாயகிகளின் நெருங்கிய உறவினர் தான் வினேஷ் போகத், இவரது தந்தை ராஜ்பால் போகத்தும் மல்யுத்த வீரர், இவரது கணவர் சோம்வீர் ராதேவும் மல்யுத்த தேசிய சாம்பியன் தான். வினேஷ் போகத் குடும்பமே மல்யுத்த குடும்பமாக இருக்கிறது.

29 வயதான ஹரியானாவைச்சேர்ந்த வினேஷ் போகத் இளம் வயதிலேயே மல்யுத்தம் பயின்றார். தனது 19 வது வயதில் யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். சீனியர் பிரிவில், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் என அனைத்து போட்டிகளிலும் பதக்கங்களை வென்றுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் எத்தனையோ பதக்கங்களை வென்றாலும் வினேஷ் போகத்திற்கு ஒலிம்பிக் பதக்கம் மட்டும் எட்டாக்கனியாகவே இதுவரை இருந்து வந்தது. 2016- ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதியில் தோல்வி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டில் காலிறுதியில் தோல்வி என ஒலிம்பிக் களம் மட்டும் அவருக்கு சாதகமற்றதாக இருந்தது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல காத்திருக்கும் இந்த வீராங்கனையை தான் கடந்த ஆண்டு டெல்லியில் போராட்டத்தின் போது காவல்துறை நடு ரோடு என்றும் கூட பார்க்காமல் தரதரவென இழுத்துச்சென்றது.

கடந்த 2023-ம் ஆண்டு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு கடின காலமாகவே இருந்தது. இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தலைவராக இருந்த அப்போதைய பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை முன்மொழிந்தவர்களில் வினேஷ் போகத் முக்கியமான ஒருவர்.

முன்னதாக கடந்த ஆண்டு பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது, ஒரு மைனர் உட்பட 7 மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதற்காக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் நீண்டநாள் தெருக்களில் படுத்துறங்கி போராடிய வினேஷ் போகத், காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாயும், வீராங்கனை வினேஷ் போகட் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு விருதுகளான 'கேல் ரத்னா' மற்றும் 'அர்ஜுனா விருது' ஆகியவற்றை டெல்லியில் நடைபாதையில் விட்டுச் சென்றனர். இத்தனை தடைகளையும் கடந்து தனது தேசத்திற்கு பெருமை சேர்க்கும் நோக்கத்தில் விளையாடி வருகிறார் வினேஷ் போகத்.

இந்நிலையில், இன்று இரவு 10:35 மணிக்கு நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் வினேஷ் போகத், கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸ் உடன் மோத உள்ளார் என்பது குறிப்பித்தக்கது.

Tags :
FinalsParisParisOlympics2024SemifinalstournamentVineshPhogatWrestlingYusneylisGuzmanLopez
Advertisement
Next Article