சசிதரூருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி இடதுசாரிகள் தவறு இழைத்துவிட்டனர் - நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி!
காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி இடதுசாரிகள் தவறு இழைத்துவிட்டனர் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் இருமுனை போட்டி நிலவுகிறது. என்னதான் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அமைப்புகள் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் கேரளத்தில் மட்டும் தனித்தே களம் காண்கின்றன.
இதேபோல காங்கிரஸ் கட்சியின் முக்கிய வேட்பாளரான சசிதரூர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். அதேபோல இடதுசாரி கூட்டணி வேட்பாளராக பன்னையன் ரவீந்திரன் போட்டியிடுகிறார். ஆனாலும் சசிதரூர் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறதாக சொல்லப்படுகிறது.
“திருவனந்தபுரத்தில் போட்டியிடும் இடதுசாரி வேட்பாளரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் ஒரு நல்ல மனிதர் மற்றும் நல்ல அரசியல்வாதி. ஆனால் சசிதரூருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியதில் இடதுசாரிகள் தவறு செய்துவிட்டனர் என்று நான் நினைக்கிறேன். தற்போது அரசியல் கட்சிகளை விட நாட்டின் நலனைப் பற்றி சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியம்.