Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெண் உயிரிழந்த விவகாரம் | நடிகர் #AlluArjun சிறையிலிருந்து விடுதலை!

08:02 AM Dec 14, 2024 IST | Web Editor
Advertisement

புஷ்பா 2 ரிலீஸின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

Advertisement

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான 'புஷ்பா 2' திரைப்படம் கடந்த டிச.5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் டிச.4 அன்று இரவு 10.30 மணியளவில் திரையிடப்பட்டது. இதனை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜூன் சந்தியா திரையரங்கிற்கு சென்றார். அப்போது அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக அதிக அளவிலான ரசிகர்கள் தியேட்டரில் கூடினர்.

இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குடும்பத்தினருடன் பிரீமியர் காட்சி பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண்ணும், அவரது மகன் ஸ்ரீதேஜாவும் (வயது 9) நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது ரசிகர்கள் பலரும் இருவர் மீதும் ஏறி மிதித்தனர். இதனால் இருவரும் மூச்சுபேச்சின்றி சுயநினைவை இழந்தனர்.

இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருததுவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தைய நிலையில் ரேவதி உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதேசமயம், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனிடையே, பெண் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் நேற்று (டிச.13) கைது செய்தனர்.

சிக்கட்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் பின்னர் நம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இது குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதற்கிடையே, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுனா அளித்த மனு தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நேற்று (டிச.13) விசாரணைக்கு வந்தது.

அப்போது, அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நம்பள்ளி கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் சஞ்சால்குடா மத்திய சிறையிலிருந்து நடிகர் அல்லு அர்ஜூன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

Tags :
Allu arjuncourtjailnews7 tamilnews7 tamil updateRelease
Advertisement
Next Article