For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி அசத்தல்!

03:05 PM Oct 01, 2024 IST | Web Editor
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி அசத்தல்
Advertisement

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதன் வாயிலாக தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Advertisement

கான்பூரில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதையடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களை திரட்டியது. இதையடுத்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி, நான்காவது நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

அதனைத்தொடர்ந்து, ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சில் வங்கதேசம் 146 ரன்களுக்கு சுருண்டது. இதனைத் தொடர்ந்து, 95 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்த இந்திய அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்களை திரட்டி வெற்றியை ருசித்தது.

ஸ்கோர் விவரம்:

முதல் இன்னிங்ஸ்:-

  • வங்கதேசம் - 233/10
  • இந்தியா - 285/9 (டிக்ளேர்)

இரண்டாவது இன்னிங்ஸ்:-

  • வங்கதேசம் - 146/10
  • இந்தியா - 98/3 (17.2 ஓவர்)

இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

Tags :
Advertisement