Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு!

07:28 PM Nov 08, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.84.37 ஆக சரிந்தது.

Advertisement

சர்வதேச அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, எப்போதும் இல்லாத அளவிற்கு இன்று ரூ.84.37-ஆக சரிந்துள்ளது. நேற்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 84.32 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.84.37-ஆக சரிந்துள்ளது.

கடந்த காலத்தில் ரூபாய் மதிப்பை நிலைப்படுத்துவதற்கு அந்நியச் செலாவணிச் சந்தையில் இந்திய ரிசர்வ் வங்கி தலையிட்டது. அதுபோல, இப்போதும் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடையுமானால், இம்முறையும் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு முடிவே இதற்கு காரணம் என அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Tags :
dollarFallsFederal Reserves BankIndiarupeeUS
Advertisement
Next Article