#Vistara நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
விஸ்தாரா ஏர் நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் தற்போது சமூக ஊடகம் மூலம் கடந்த 6 நாளில் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 70-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் அது பொய் என தெரியவந்தது.
இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர், விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட், ஸ்டார் ஏர் மற்றும் அலையன்ஸ் ஏர் விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு இந்திய விமான நிறுவனங்களை சேர்ந்த சுமார் 30 விமானங்களுக்கு இன்று மட்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையும் படியுங்கள் : Splendor பைக் திருடர்கள் இருவர் கைது – ஆர்டரின் பெயரில் திருடித் தருவதாக அதிர்ச்சி வாக்குமூலம்!
இந்நிலையில், தற்போது விஸ்தாரா ஏர் நிறுவனத்தின் விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஸ்தாரா நிறுவனத்தின் மும்பையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் உள்ளிட்ட 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். பாலி – டெல்லி, டெல்லி- பிராங்பேர்ட் விஸ்தாரா விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.