புஷ்பா ட்ரைலரில் இடம்பெற்றதாக வைரலாகும் படங்கள் உண்மையல்ல - அது ஒரு #DeepFake !
This news Fact Checked by ‘Newsmeter’
புஷ்பா 2 ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகள் என அல்லு அர்ஜுன் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை விரிவாக காணலாம்.
நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2: தி ரூல்: திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சிகள் பல நகரங்களில் பெரிய அளவில் கவனம் ஈர்த்தன. இப்படம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளது. சுகுமார் இயக்கிய திரைப்படங்களிலேயே மாபெரும் வெற்றியை இப்படம் தேடித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டிரெய்லர் நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்டது. ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் அல்லு அர்ஜுனின் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ அவரையும் திரைப்படத்தையும் எதிர்மறையான சித்தரிக்கிறது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து காணாலாம்.
உண்மை சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் AI (செயற்கை நுண்ணறிவு) பயன்படுத்தி கையாளப்பட்ட திரைப்படத்தின் டிரெய்லரில் இருந்து நான்கு கிளிப்புகள் உள்ளன.வைரல் வீடியோவின் கிளிப்களை அசல் டிரெய்லருடன் ஒப்பிட்டு பார்க்கலாம். முதல் வைரல் கிளிப்பில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனாவின் காலை கடிப்பது போல் காட்சியளிக்கிறது. இருப்பினும், அசல் ட்ரெய்லரும் (1.04 நிமிடங்களில்) அதே காட்சியைக் காட்டுகிறது, ஆனால் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனாவின் காலை தன் முகத்தால் மெதுவாகத் தடவுவது போன்ற காட்சி உள்ளது.
அசல் டிரெய்லரில் (1:02 நிமிடங்களில்) அல்லு அர்ஜுன் மீது ராஷ்மிகா மற்றும் பலர் தண்ணீர் தெளிப்பதைக் காட்டுகிறது. ஆனால் AIஆல் கையாளப்பட்ட இரண்டாவது கிளிப்பில் அர்ஜுன் அவர்கள் மீது துப்பாக்கியால் சுடுவதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இதேபோல மூன்றாவது கிளிப் அல்லு அர்ஜுன் சுருட்டு பற்றவைப்பதையும் அதன்மூல பெரும் தீ அவரை எரிப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு நேர்மாறாக அசல் டிரெய்லர் (0:46-வினாடிகளில்) பற்றவைக்கும் காட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு படத்திற்கும் அசல் மற்றும் உருவாக்கப்பட்ட படங்களின் வேறுபாட்டை காணலாம்.
வைரல் வீடியோ AI ஐப் பயன்படுத்தி கையாளப்பட்டுள்ளதா என்பதை நியூஸ்மீட்டர் AI-கண்டறியும் தொழில்நுட்பம் மூலம் வீடியோவை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆய்வில் AI- ஆல் உருவாக்கம் செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியது. இந்த வீடியோவில் ஹைவ் மாடரேஷன் 99.9 சதவீத உள்ளடக்கம் கையாளப்பட்டதாகக் கண்டறிந்தது, அதே நேரத்தில் டிஎஸ்பி-எஃப்டபிள்யூஏ (2019) உள்ளிட்ட டீப்கபேக்-ஓ-மீட்டரின் டிடெக்டர்கள் AI உருவாக்குவதற்கான 99.2 சதவீத வாய்ப்பை மதிப்பிட்டுள்ளன. கூடுதலாக, டீப்வேர் வீடியோவை ஸ்கேன் செய்யும் போது சந்தேகத்திற்குரியதாகக் கோடிட்டு காட்டி அதன் செயற்கைத் தன்மையை மேலும் உறுதிப்படுத்தியது.
முடிவு :
புஷ்பா ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகள் என சில காட்சிகள் ரசிகர்களால் பகிரப்படுகிறது. இது உண்மையானவை அல்ல , செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்பது உறுதியாகியுள்ளது.
Note : This story was originally published by ‘Newsmeter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.