For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரபல அமெரிக்க இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் பக்கத்து வீடு விற்பனை - வீட்டை வாங்கினாலும் அதில் தங்க முடியாது.. ஏன்?

11:15 AM Mar 05, 2024 IST | Web Editor
பிரபல அமெரிக்க இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் பக்கத்து வீடு விற்பனை   வீட்டை வாங்கினாலும் அதில் தங்க முடியாது   ஏன்
Advertisement

பிரபல அமெரிக்க இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் பக்கத்து வீடு விற்பனைக்கு வந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் அந்த வீட்டை வாங்கினாலும் அதில் தங்க முடியாதுன்னு அதிர்ச்சியா இருக்குல்ல.. வாங்க விரிவாக பார்க்கலாம்.

Advertisement

வீடு வாங்குறது இங்க பல மிடில் கிளாஸ் மக்களோட முக்கியமான கனவு. எத்தனை காலத்திற்கு வாடகை வீட்டிலே இருந்து மரணித்து போக வேண்டும். சொந்தமா ஒரு வீடு வாங்கி அந்த வீட்டில் குடும்பமாக சந்தோஷமாக வாழ்ந்து எஞ்சிய வாழ்க்கையை நிம்மதியாக முடிக்க வேண்டும் என்று நினைக்காத நபர்களே இல்லை.

 சின்ன சின்ன அபார்ட்மெண்ட்கள், குருவிக் கூடு போல உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்றவற்றில் வாழ்பவர்களுக்கு மிக நிச்சயமாக ஒரு சலிப்பும் , வெறுப்பும் இருக்கவே செய்யும். காற்றோட்டமான, விசாலமான, இயற்கை அழகு கொஞ்சும் சூழல் உள்ள ஒரு வீட்டில் ஒரு நாளாவது வாழ்ந்து விட மாட்டோமா என்கிற ஏக்கம் அனைவருக்குமே உண்டு.

அதுபோலவே இயற்கை அழகோட ஒரு வீடு, நீரோடைக்கு பக்கத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும், அதுவும் உலகமே வியந்து பார்க்கும் சினிமா பிரபலம் அந்த வீட்டீன் அண்டை வீட்டுக்காரராக கிடைத்தால் வரும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் 38 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒரு வீடு விற்கப்படுவதாக அறிவித்தது. இதில் என்ன ஆச்சரியம் எனக் கேட்கிறீர்களா..? அந்த வீடு இயற்கை எழில் கொஞ்சும் சூழலுடன், குளத்தின் கரைக்கு பக்கத்தில் மிக அழகாக கட்டப்பட்டுள்ளது. அதைவிட கூடுதல் சுவாரஸ்யம் என்னவெனில் பிரபல ஜுராசிஸ் பார்க் படத்தை இயக்கிய ஹாலிவுட் பட இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அந்த வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர். இந்த வீட்டை வாங்குவதன் மூலம் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் அண்டைவீட்டுக்காராராக மாறிவிடலாம்.

இப்படிப்பட்ட வீட்டை வாங்க யாருதான் போட்டி போடாம இருப்பா..? . அப்படி கஷ்டப்பட்டு சேர்த்து வச்ச காசு வச்சி வீட்டை வாங்கி நிம்மதியா வாழ்ந்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் பக்கத்து வீட்டுக்காரரா ஆகிவிடலாம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அங்கதான் ஒரு ட்விஸ்டு..

நியூயார்க் நகரத்தை தளமாகக் கொண்டு  செயல்படும் அமெரிக்க ரியல் எஸ்டேட் டெவலப்பர் மற்றும் முதலீட்டாளரான ஹாரி மேக்லோ ஹாம்டனில் உள்ள இந்த வீட்டை 38 மில்லியன் அமரிக்க டாலருக்கு விற்பதாக அறிவித்திருந்தார். பிரச்னை என்னவெனில் இந்த வீடு முறையான அனுமதியின்றி கட்டப்பட்டதால் சட்டப்பூர்வ சிக்கல்களை  சந்தித்து வருகிறது.  இந்த வீட்டிற்கு நிலம் மற்றும் கட்டுமானம்  தொடர்பான 21 மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த வீட்டின் உரிமையாளரான ஹாரி மேக்லோ இந்த வீட்டில் தங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த வீட்டை வாங்கும் புதிய உரிமையாளர்கள் இந்த வீட்டில் தங்க உரிமை இல்லை. அதற்கு சட்டம் அனுமதிக்கவில்லை. எனவே இந்த வீட்டை வாங்கி அதில் தங்கி ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் பக்கத்து வீட்டுக்காரராகனும்னு நினைச்சீங்கன்னா அந்த கனவை மறந்துருங்க.

Tags :
Advertisement