ரீல்ஸ் மோகத்தால் நடந்த பயங்கரம் - "அம்மா... அம்மா..." என கதறிய குழந்தை.. அதிர்ச்சி வீடியோ!
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் காணொலிகளை வெளியிடுவதை பெரும்பாலானோர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த காணொலிகளுக்கு சமூக வலைதளத்தில் அதிகமான லைக்குகள் கிடைப்பதால் பலர் ஆர்வமுடன் ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.
சினிமா பாடலுக்கு நடனமாடுவது, சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை தத்ரூபமாக நடித்து ரீல்ஸ் வெளியிடுவது உள்பட புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் ரீல்ஸ்காக உயிரைப் பணயம் வைக்கிறார்கள். அந்த வகையான சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது.
அதன்படி, கங்கை நதியில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் உத்தரகாண்டில் உள்ள உத்தரகாஷிக்குச் சென்றிருந்தார். மணிகர்ணிகா காட் அருகே கங்கை நதியில் இறங்கி அப்பெண் ரீல்ஸ் வீடியோ எடுத்தார். அப்போது கங்கை நதியில் அப்பெண் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
அந்த ரீல்ஸ் வீடியோவில், அப்பெண் அடித்து செல்லப்படுகையில், அவரின் குழந்தை தனது தாயை, 'அம்மா..அம்மா..என்று கதறி கூப்பிடுவது பதிவாகியுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படையினர் அப்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.