ஆறாயிரம் ரன்களை கடந்து புதிய 2 சாதனைகளை படைத்த ஹிட் மேன்!
2025 ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று(மே.01) நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி மும்மை அணி அசத்தியது. இதன் மூலம் 14 புள்ளிகளுடன் மும்மை அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்த போட்டியின்போது ரோஹித் சர்மா 36 பந்துகளுக்கு 53 ரன்கள் அடித்து மும்மை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதன் மூலம் ரோஹித் சர்மா மும்மை அணிக்காக 6000 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தினார்.
இந்த நிலையில், ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தின் மூலம் இரண்டு புதிய சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி டி20 கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை கடந்தவர் என்ற பட்டியலில் 2வது இடத்திலும், மும்மை அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர் என்ற பட்டியலில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
டி20 கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 8,871 ரன்களுடன் முதலிடத்திலும். அதைத் தொடர்ந்து தற்போது ரோஹித் சர்மா 6,024 ரன்களுடன் 2வது இடத்திலும் உள்ளார். இவர்களை தொடர்ந்து ஜேம்ஸ் வின்ஸ் 5,934 ரன்களுடம் 3வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 5,528 ரன்களுடன் 4வது இடத்திலும், எம்.எஸ்.தோனி 5,269 ரன்களுடன் 5 வது இடத்திலும் உள்ளனர்.