பள்ளிவாசல் திறப்பு விழா - சீர்வரிசையுடன் வந்த இந்து சமூகத்தினர்!
புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் குர்ஆன், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்களை தாம்பூல தட்டில் கொண்டு வந்த இந்து சமூகத்தினர்.
மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டி நான்கு வழிச்சாலை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மஸ்ஜித் அல் ஜம்ஜம் பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதனையொட்டி, மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக, இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு, இஸ்லாமியர்களின் புனித நூலான குரான், மற்றும் பல்வேறு வகையான பழங்கள், இனிப்பு வகைகள், பட்டு துணிகள், மலர்கள் உள்ளிட்ட பல சீர்வரிசை பொருட்களை தாம்பூல தட்டில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இதையும் படியுங்கள் : “இந்தியா கூட்டணியினர் ஏழைகளின் நலனைப் பற்றி சிந்திப்பார்களா?” – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி!
இதையடுத்து, அவர்களுக்கு மேலூர் ஜமாத் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பள்ளிவாசலுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர். தொடர்ந்து அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.
புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு, இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கியது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.