Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Sankarankoil சங்கரநாராயண கோயிலுக்குள் புகுந்த மழைநீர் - தேங்கிய நீரில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்!

09:57 PM Oct 13, 2024 IST | Web Editor
Advertisement

கனமழை காரணமாக சங்கரன்கோவில் சங்கரநாராயண கோயிலுக்குள் மழைநீர் புகுந்த நிலையில், பக்தர்கள் மழைநீரில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Advertisement

மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (அக்.13) வடமேற்கு திசைக்கு நகர்ந்து மத்திய அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாகவும், தென் தமிழக மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் தனித்தனி வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காணப்படுவதாகவும், இதனால் அரபிக்கடலில் நிகழும் காற்றழுத்தம் மேற்கே நகர வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நாளை (அக். 14) உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் எனவும், அது வடதமிழ்நாட்டின் கரையோரம் நிலவக்கூடும் என்பதால் தமிழ்நாட்டிற்கு மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. நாளை முதல் வரும் 16ம் தேதி வரை மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அதேபோல், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது. தேங்கிய மழை நீரில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே, கோயிலினுள் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Next Article