For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“இதயமே உடைகிறது” - வருத்தங்களை பகிர்ந்துகொண்ட சூர்ய குமார் யாதவ்!

11:11 AM Dec 16, 2023 IST | Web Editor
“இதயமே உடைகிறது”   வருத்தங்களை பகிர்ந்துகொண்ட சூர்ய குமார் யாதவ்
Advertisement

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து, ரோகித் சர்மா மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, அந்த அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் தனது வருத்தங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல் தொடர்.  ஐபிஎல் போட்டிகளில் அனல் பறப்பதால் ஒவ்வொரு வருடமும் இத்தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.  ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் வீரர்கள் அணி மாறுவதும், அதிரடி மாற்றங்கள் நிகழ்வதும் வாடிக்கையானது.

இதன்படி இந்த சீசனுக்கான ஏலத்திலும் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, டிரேடிங் முறையில் மீண்டும் மும்பை அணிக்காக வாங்கப்பட்டார். மேலும் அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் இருந்து, ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்தது மும்பை அணி நிர்வாகம். கடந்த 10 ஆண்டுகளாக மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, 5 கோப்பைகளை வென்று கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணியில் ஏற்பட்ட இந்த அதிரடி மாற்றம், அந்த அணியின் ரசிகர்கள் பட்டாளத்தில் விளைவை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தது போல, அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் Followers-ஐ இழந்துள்ளது. ரோகித் சர்மா ரசிகர்களும், மும்பை அணியின் தனிப்பட்ட ரசிகர்களும் தங்களது வருத்தங்களையும், ரோகித் சர்மாவின் புகழை போற்றும் வகையில் பல பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தின் #ShameonMI என்ற ஹேஷ்டேக், கேப்டன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரான சூர்யகுமார் யாதவ், தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இதயம் உடையும் ஈமோஜியை பதிவிட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோகித் சர்மா ரசிகர்களைப் போலவே அவரும் தனது வருத்தத்தை பதிவு செய்யும் விதமாக இந்த பதிவினை சூர்யகுமார் யாதவ் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

Tags :
Advertisement