For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கொல்லங்கோடு காளியம்மன் கோயிலில் தூக்க நேர்ச்சை விழா கோலாகலம்!

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் 1000க்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகளுடன் தூக்கநேர்ச்சை திருவிழா துவங்கியது.
03:43 PM Apr 01, 2025 IST | Web Editor
கொல்லங்கோடு காளியம்மன் கோயிலில் தூக்க நேர்ச்சை விழா கோலாகலம்
Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திர காளியம்மன் திருக்கோயிலில், பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தில் தூக்கநேர்ச்சை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

Advertisement

இந்த ஆண்டிற்கான தூக்கதிருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10ஆம் நாள் திருவிழாவான இன்று, பங்குனி மாத பரணியையொட்டி பச்சிளம் குழந்தைகளுக்காகான தூக்கநேர்ச்சை அதிகாலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

பச்சிளம் குழந்தைகளை நேர்ச்சைக்கு கொடுத்த பிறகு, அந்தரத்தில் குழந்தைகளை தூக்ககாரர்கள் கையில் வைத்துக்கொண்டு கோயிலை வலம் வரும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. சுமார் 40அடி உயரம் கொண்ட இரண்டு வில்கள் வண்டியில் பொருத்தபட்டு, ஒவ்வொரு வில்லிலும் இரண்டு தூக்ககாரர்கள் என 4பேர் இந்த வில்லுடன் பிணைக்கப்பட்டு, அவர்களின் கைகளில் நேர்ச்சை குழந்தைகள் வழங்கபட்டு இந்த தேரை பக்தர்கள் சரண
கோஷத்துடன் ஆலயத்தை ஒருசுற்று சுற்றி வருவது தூக்க நேர்ச்சை
திருவிழாவாகும்.

இந்த ஆண்டு 1166 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெறவுள்ளது. 300முறை இந்த தூக்க வில்லில் குழந்தைகளுடன் மூலக்கோயிலை சுற்றி வருவது குறிப்பிடதக்கது. இன்று துவங்கிய தூக்கநேர்சையானது நாளை காலை வரை தொடர்ந்து நடைபெறும். இந்நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கேரளாவிலிருத்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

தூக்க நேர்ச்சையை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பக்தர்களுக்காக இலவச முருத்துவ முகாம், உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Tags :
Advertisement