Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

10 மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்! - மீண்டும் நிறைவேற்ற நாளை மறுநாள் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்!

12:50 PM Nov 16, 2023 IST | Web Editor
Advertisement

நிலுவையில் உள்ள 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.  இந்த நிலையில்,  அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்ற நாளை மறுநாள் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. 

Advertisement

மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப்படுத்தும் தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகளைச் சட்டவிரோதம் என தமிழ்நாடு அரசு பலமுறை குற்றச்சாட்டுகளை வைத்து வந்ததது. அத்துடன்,  10 மசோதாக்களை ஒப்புதல் அளிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் அண்மையில் மனு தாக்கலும் செய்யப்பட்டது.

இதே போல்,  மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ள பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக அந்த மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.  இது தொடர்பான விசாரணை அண்மையில் நடைபெற்றது.  அப்போது, சட்டப் பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர்கள் கிடப்பில் வைத்திருப்பது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.  மசோதாக்களை நிலுவையில் வைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில்,  தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களில் விளக்கம் கேட்டு ஆளுநர் ரவி இன்று திருப்பி அனுப்பினார்.  அதன் விவரம் வருமாறு:

1)  சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா,

2)  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா

3)  தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா

4)  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

5)  தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக திருத்த மசோதா

6) தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

7) தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

8)  தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மசோதா

9) அண்ணா பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

10) அத்துடன் தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதா

ஆளுநரின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,  இந்த 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் நாளை மறுநாள் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் இந்த மசோதாக்களை நிறைவேற்றி  அனுப்பினால்,  ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பதை தவிர வேறுவழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Next Article