Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூகினியா வர வேண்டும் - ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் அழைப்பு

07:20 PM Nov 01, 2023 IST | Web Editor
Advertisement

இந்திய கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு கல்வி சேவை வழங்க வேண்டும் என அந்நாட்டின் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் கோரிக்கை விடுத்துள்ளார். 

Advertisement

தமிழ்நாட்டின் சிவகாசியில் பிறந்த சுசீந்திரன் முத்துவேல் பப்புவா நியூ கினியாவின் மாகாண ஆளுநராக உள்ளார்.  கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளைஞர்களின் வளர்ச்சி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் சுசீந்திரன் முத்துவேல், பப்புவா நியூ கினியாவின் வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சுசீந்திரன் முத்துவேல் பேசியதாவது:

”பப்புவா நியூ கினியாவில், கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் அரசால் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.  இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  எனவே இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் எங்கள் நாட்டில் கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் வழங்க முன்வர வேண்டும்.  இது வர்த்தக ரீதியாகவும் இரு நாடுகளுக்கும் பலனளிக்கும்.

இதையும் படியுங்கள்: "மிசோரமின் அமைதி, முன்னேற்றம் மற்றும் நலனுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்" - சோனியா காந்தி உருக்கம்!

பப்புவா நியூ கினியா மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையே 1980-களில் இருந்தே நல்ல உறவு நீடித்து வருகிறது. கனிம வளம், விவசாயம் நிறைந்த எங்கள் நாட்டிற்கு செயற்கைக் கோள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இஸ்ரோ குழுவினர் பப்புவா நியூ கினியா வரவுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80,000 மாணவர்கள் 12-ம் வகுப்பில் தேர்வானாலும் தொழிற்கல்வி,  பல்கலைக்கழகங்கள் மற்றும் அயல்நாடுகள் மூலம் 30,000 மாணவர்களுக்கு மட்டுமே கல்வி வாய்ப்புகள் கிடைக்கிறது.  மீதமுள்ள 50,000 மாணவர்கள் உயர்கல்வி பெற முடியாத நிலையில் தான் உள்ளனர்.  எனவே இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் எங்கள் நாட்டிற்கு கல்வி சேவை வழங்கினால் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.  இவ்வாறு பப்புவா நியூ கினியா ஆளுநர் சுசீந்திரன் முத்துவேல் தனது உரையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
EducationGovernorHigherStudieshospitalIndiaPapuaNewGuineastudents
Advertisement
Next Article