"காஷ்மீர் தாக்குதலுக்கு அரசு தகுந்த பதிலடி கொடுக்கும்" - அண்ணாமலை பேட்டி!
சென்னை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
"காஷ்மீர் சம்பவம் மனிதன் இப்படியெல்லாம் செய்வானா என்ற கேள்வி எழுந்து உள்ளது. எல்லாம் மதமும் ஒன்று என்று நினைக்க கூடியவன். ஆனால் வரக்கூடிய தீவிரவாதிகள் அப்படி நினைக்கவில்லை. குரான் எழுத்து சொல்லு, இந்துவா முஸ்லீமா என்று கேட்டு 26 அப்பாவிகளை படுகொலை செய்து உள்ளனர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சவூதி அரேபியா சென்றவர் அவசரமாக இந்தியா திரும்பி உள்ளார். அமெரிக்க துணை அதிபர் இந்தியாவில் உள்ளார். ஐ.எஸ்.ஐ. தாக்குதல் நடத்தி உள்ளது. இதை கண்டிக்கிறோம் என்று சொல்வதை விட நம்முடைய அரசு கொடுக்க கூடிய பதிலடி முக்கியமாக இருக்க போகிறது. மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் ஆக்ரோசமாக பதிவுகள் போடுவது தேவையில்லாதது.
அரசு இயந்திரம் என்ன செய்ய வேண்டுமோ அதை தகுந்த நேரத்தில் செய்யும். ஆண்டி டேரர் ஆபரேசன் தொடங்கி இருப்பதாக ஜம்மு காஷ்மீர் ஆளுநர் கூறி உள்ளார். அரசு நிச்சயமாக பதிலடி எப்படி கொடுக்குமோ எந்த நேரத்தில் கொடுக்குமோ அப்போது தரும். கோழைத்தனமான தாக்குதலுக்கு பயந்து வேலையை நிறுத்தினால் தான் தீவிரவாதிகளுக்கு பயந்தது போல் ஆகும். நிச்சயமாக அரசு பதிலடி கொடுக்கும்.
இந்த விவகாரத்தில் அரசியல் பேசுகிறவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். பிரதமர் 3வது முறையாக பதவியேற்ற தினத்திலேயே காஷ்மீரில் தாக்குதல் நடந்தது. பாகிஸ்தான், ஐ.எஸ்.ஐ. ஆகியவை இந்தியாவில் அமைதியை ஒழிக்க வேண்டும் அச்சறுத்தலை ஏற்படுத்த வேண்டும் என தொடர்ந்து செய்கின்றனர். காஷ்மீரில் 370வது பிரிவு எடுத்த பின்னர் கட்டுக்குள் இருக்கிறது. இந்த துர்திஷ்டவசமான நிகழ்வு முலம் இந்தியர்கள் எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும்.
தாக்குதல் சம்பவத்தில் இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். குரான் எழுத்துகளை சொல்லாதவர்களை துப்பாக்கியால் கொன்று உள்ளதாக பேட்டி அளித்துள்ளனர். அப்போது காப்பாற்ற வந்தவர்கள் அங்குள்ள இஸ்லாமிய மக்கள் தான். முதற்கட்ட சிகிச்சை உள்பட அணைத்து உதவிக்கும் அங்குள்ள இஸ்லாமிய
சொந்தங்கள் தான் வந்துள்ளனர்.
நமக்குள் வேற்றுமைகள் இல்லை. ஆனால் தீவிரவாதிகள் மன நிலை அடிப்படையில் தான் உள்ளனர். தீவிரவாதத்தை தான் கண்டிக்கிறோம். அரசு இயந்திரங்கள் நிச்சயமாக பதிலடி கொடுப்பார்கள். பாகிஸ்தான் ராணுவ அதிகாரி காஷ்மீர் எங்களுடையது என்று பேசி உள்ளார். இந்தியா வளர்வது அமைதியாக இருப்பது பிடிக்கவில்லை.
தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைக்கும் சண்டை நடப்பது உண்டு. ஆனால் நீண்ட நாள் கழித்து அப்பாவி மக்களை தாக்குகிறார்கள். இதை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள். இதில் என்ன சித்தாத்தம் இருக்கிறது. கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் வந்து 26 பேரை கொன்று உள்ளனர். இந்த தீவிரவாதம் வேரறுக்கப்பட வேண்டும்.
பிரதமர் பயணத்தை முடித்து கொண்டு வந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அங்கே உள்ளார். உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர். சாதாரண பொது மக்கள் பாதுகாப்பு இல்லாமல் சில இடங்களில் உள்ளனர். இதை பயன்படுத்தி தீவிரவாதிகள் பொது மக்களை தாக்குவோம் என அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர். அரசு பதிலடி கொடுக்கும்.
இந்த சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று உள்ள அமைப்பு லஸ்கரி அமைப்புடன் நேரடி தொடர்பு. லஸ்கரி அமைப்பு பாகிஸ்தானுடன் நேரடி தொடர்பு வைத்து உள்ளது. இதில் தொடர்புள்ளவர்கள் குறித்த விவரங்களை அரசு வெளியிடும்" என்று தெரிவித்துள்ளார்.