Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மது, போதை அதிகம் உள்ள தமிழ்நாட்டில் ஆட்சி அகற்றப்பட வேண்டும்" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
12:30 PM Aug 30, 2025 IST | Web Editor
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஏழை எளிய மக்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகளையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

Advertisement

இதனை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றுகையில், "ஜி.கே.மூப்பனார் பிரதமர் ஆவதை தடுக்த சக்தி யார் என்பது அனைவருக்கும் தெரியும். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் நல்லாட்சி வேண்டும் என்ற நிலையில் தமிழக மக்கள் உள்ளனர். மது, போதை அதிகம் உள்ள தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதிமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "2026 சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீட்டுக்கு விரட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே.வாசன் பேசுகையில், கொரோனா பெரும் தொற்றுக்குப் பிறகு, இந்தியா பொருளாதார ரீதியில் சிறந்து விளங்குகிறது என்றால் அது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமின் செயல்பாடுகளால் தான் என்று பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Tags :
alcoholBJPDMKFinance MinistergovernmentNirmala sitharamantamil nadu
Advertisement
Next Article