இதுவரை உலகை மிரள வைத்த GOATs - யார்...யார்...?
தி கோட் பட்டத்தை உலகளவில் தக்கவைத்த பிரபலங்கள் குறித்து விரிவாக காணலாம்
நடிகர் விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் இன்று வெளியாகி உள்ளது. தி கோட் திரைப்படம் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியான முதல் திரைப்படமாகும்.
Greatest of All Time என்கிற வார்த்தைக்கு எக்காலத்திலும் சிறந்தவர் எனப் பொருள். சினிமா மட்டுமல்லாமல் கிரிக்கெட், ஃபுட் பால், பாக்ஸிங் என விளையாட்டுகளிலும் இந்த பட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விஜயின் திரைப்படத்திற்கு GOAT என பெயரிடப்பட்டுள்ளதன் மூலம் இனி நடிகர் விஜய்யும் The GOAT என ரசிகர்களால் அழைக்கப்படுவார். இதுவரை உலக பிரபலங்கள் யார் யார் எல்லாம் தி கோட் என அழைக்கப்பட்டனர் என்பது குறித்து விரிவாக காணலாம்.
The GOAT என்ற சொல் உருவான கதை
உலகம் இன்று கொண்டாடும் குத்துச் சண்டை வீரரான முகமது அலியை முதன்முதலில் GOAT என அழைத்தனர். இந்த 'Greatest of ALL Time' என்கிற பதம் அவருக்காக உருவாக்கப்பட்டது. முகமது அலி பாக்ஸிங்கில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவரது மனைவி ஒரு முக்கியமான முடிவை எடுத்தார். அவரது அறிவுசார் சொத்துகளை வணிக நோக்கத்துடன் பயன்படுவதற்கான உரிமம் வழங்க எண்ணிய அவரது மனைவி லோனி அலி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனப் பொருள்படும் வகையில் G.O.A.T. Inc. -ஐ என்பதை உருவாக்கினார். 2000ம் ஆண்டு வரை முகமது அலியைத் தவிர வேறு எந்த நபரையும் ரசிகர்கள் The GOAT என அழைக்கவில்லை.
ராப் பாடகரும் The GOAT பாடலும்
புகழ்பெற்ற ராப் பாடகர் எல்.எல்.கூல்.ஜே 2000-ம் ஆண்டு G.O.A.T என்ற பாடலை வெளியிட்டார். அப்பாடலின் I'm GOAT, I'm the greatest of all time என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது. இதன் பின்னர் தி கோட் குறித்து மனம் திறந்த இப்பாடகர் "முகமது அலி இல்லாமல் இந்த வரி இல்லை" என தெரிவித்துள்ளார். இதன் மூலம் GOAT என்ற பதம் முகமது அலிக்கு மட்டுமே சொந்தமாகியிருந்தது.
மைக்கேல் பெல்ப்ஸ்
2016-ல் அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸின் ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு அவரை கூகுள் GOAT என அடையாளப்படுத்தியது. இதன் பின்னர் சமூக வலைதளங்களில் இந்த பெயர் பரவ தொடங்கியது.
The GOAT - மெஸ்ஸியா ? ரொனால்டோவா?
பல துறையைச் சார்ந்த பிரபலங்கள் உச்சத்தை தொட்டாலும் விளையாட்டில் மட்டும்தான் அதிலும் குறிப்பாக கால்பந்து போட்டியில் தான் GOAT என்ற வார்த்தை அடிக்கடி உச்சரிக்கப்பட்டது. உலகம் முழுக்க சமூக வலைதளங்களில் The GOAT விவாதம் தான் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. உண்மையான GOAT யார் மெஸ்ஸியா - ரொனால்டோவா என்கிற விவாதம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.
இது தொடர்பான முழுமையான விவரங்களை காண...