ஊரை சூழ்ந்த வெள்ளம் | மலைக் கோயிலில் தஞ்சம் அடைந்த கிராம மக்கள்! நியூஸ் 7 தமிழ் பிரத்யேக தகவல்!
வெள்ளப்பெருக்கு காரணமாக 300 க்கு மேறப்பட்ட கிராம மக்கள் மலைப்பகுதியில் உள்ள கோயிலில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலர் வெள்ள நீரில் சிக்கி தவிக்கின்றனர்.மீட்பு குழுக்கள் அனைவரையும் மீட்டு வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதியை சுற்றியுள்ள 15 க்கு மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 300 க்கு மேறப்பட்டோர் அப்பகுதியில் உயரமான மலை பகுதியில் உள்ள வெங்கடாசலபதி கோயிலில் தஞ்சம் அடைந்துள்ளனர். மலையை சுற்றியும் நீர் சூழந்துள்ளது. அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் வழங்கி வருகின்றனர்.