For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பைட் கிளப் திரைப்படத்தின் முதல் வார வசூல் இத்தனை கோடியா.!

09:30 PM Dec 21, 2023 IST | Web Editor
பைட் கிளப் திரைப்படத்தின் முதல் வார வசூல் இத்தனை கோடியா
Advertisement

ஃபைட் கிளப் திரைப்படத்தின் வசூல் விவரம் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement

அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club). இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். கடந்த வெள்ளி கிழமை (டிசம்பர் 15) வெளியான பைட் கிளப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஃபைட் கிளப் திரைப்படத்தின் வசூல் விவரம் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இப்படம் கடந்த 6 நாட்களில் உலக அளவில் ரூ.8.98 கோடி வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement