அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!
அண்டார்டிகாவின் மிக உயரமான வின்சன் சிகரத்தில் ஏறி தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி ஒன்றியம் ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச் செல்வி. இவர் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ் பெண் என்ற சாதனை படைத்தவர். இந்நிலையில் தற்போது அண்டார்டிகா கண்டத்தில் 16 ஆயிரம் அடி உயரமுள்ள மவுண்ட் வின்சன் என்ற சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தற்போது இந்த மிக உயரமான மவுண்ட் வின்சன் சிகரத்தை ஏறியதாக கூறினார். இந்நிலையில் முத்தமிழ்ச்செல்விக்கு அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். முத்தமிழ்ச் செல்வி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து உள்ளதாகவும் மேலும் இது போல சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் பாராட்டி வருகின்றனர்.