Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளியானது 'Wolf ' திரைப்படத்தின் முதல் பாடல்! 

08:15 PM Jun 28, 2024 IST | Web Editor
Advertisement

பிரபுதேவா நடிக்கும்  'உல்ஃப்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

Advertisement

நடன இயக்குநராக இருந்து நடிகர், இயக்குநர் என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வருபவர் பிரபு தேவா. தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொய்க்கால் குதிரை, பாகீரா ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது மலையாள இயக்குநர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் ‘பேட்ட ராப்’  திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்து வருகிறார்.  அதேபோல் 'உல்ஃப்' படத்திலும் பிரபுதேவா நடித்துள்ளார்.  பிரபுதேவாவின் 60வது படமான இந்த படத்தை இயக்குநர் வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.  இத்திரைப்படத்தில் அஞ்சு குரியன்,  அனுசுயா பரத்வாஜ்,  ராய் லக்ஷ்மி,  வசிஷ்ட சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், 'உல்ஃப்' படத்தின் முதல் பாடலான வெண்ணிலவே பாடல் வெளியாகியுள்ளது.  மதன் கார்க்கி எழுதிய இந்த பாடலை முகேன் ராவ் பாடியுள்ளார்.  இத்திரைப்படத்தை இயக்கிய வினோ வெங்கடேஷ் எஸ்.ஜே சூர்யாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
first singlemovie updatePrabhuDevaVennilaveWolf
Advertisement
Next Article