For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெளியானது ‘ஸ்டார்’ திரைப்படத்தின் Star In The Making பாடலின் மேக்கிங் வீடியோ!

09:22 PM Feb 16, 2024 IST | Web Editor
வெளியானது ‘ஸ்டார்’ திரைப்படத்தின் star in the making பாடலின் மேக்கிங் வீடியோ
Advertisement

கவின் நடித்துள்ள 'ஸ்டார்' படத்தின் Star In The Making பாடலின் மேக்கிங் வீடியோ வெளியானது. 

Advertisement

‘டாடா’ விற்கு பின் கவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்  ‘ஸ்டார்’.  இத்திரைப்படத்தை இயக்குநர் இளன் இயக்குகிறார்.  இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக அதிதி எஸ். போஹன்ஹர் நடித்து வருகிறார். இதனிடையே இத்திரைப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ நேற்று வெளியானது.

இதில் கவின் பல வேடங்களில் வருவது போல் காட்டப்பட்டுள்ளது.  படத்தில் கவின் கதாநாயகனாகும் கனவில் இருக்கும் கதாபாத்திரமாக காட்டப்பட்டுள்ளது.  இந்த க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர்.  பிக்பாஸிற்கு பின் அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றியடைந்து வருகின்றன.

டாடா படத்திற்கும் பின் மிகவும் பிரபலமடைந்தார். இதன்மூலம் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக கவின் உள்ளார். மேலும் ஒரே நேரத்தில் மூன்று படங்களை கவின் கைவசம் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவுடன் கூடிய பாடல், இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Tags :
Advertisement