For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

’லால் சலாம்’ திரைப்படத்தின் முதல் பாடலான ’தேர் திருவிழா’ - நாளை வெளியாகும் என அறிவிப்பு.!

01:01 PM Dec 17, 2023 IST | Web Editor
’லால் சலாம்’ திரைப்படத்தின் முதல் பாடலான ’தேர் திருவிழா’   நாளை வெளியாகும் என அறிவிப்பு
Advertisement

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்,  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி லால் சலாம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “தேர் திருவிழா” நாளை (டிச.18) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  கடந்த 2012-ம் ஆண்டு நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார்.  இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த  ”வை ராஜா வை” என்ற படத்தையும்  இயக்கினார்.

இந்த நிலையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில்  நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கின்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள  இந்தப் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடித்துள்ளார். 2024 ம் ஆண்டு பொங்கலுக்கு லால் சலாம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்,லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “தேர் திருவிழா” நாளை (டிச.18) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Advertisement