தீபாவளியன்று வெளியாகும் ’கருப்பு’ படத்தின் முதல் பாடல்..!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் படம் கருப்பு. இப்படத்தை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'கருப்பு' படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, ஸ்வாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
அண்மையில் கருப்பு படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பர்ப்பை எகிற வைத்தது. இந்த நிலையில் தற்போது படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள கருப்பு படத்தின் முதல் பாடல் வரும் தீபாவளியன்று வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக கருப்பு படத்தின் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் ‘சரவெடி ஆயிரம் வெடிக்கனுமா...’ எனப் பதிவிட்டிருந்தார்.