For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முதல் சமூக வலைதளமும் ஹாவர்டு டீனின் தேர்தல் பிரச்சாரமும்!

09:53 PM Feb 18, 2024 IST | Web Editor
முதல் சமூக வலைதளமும் ஹாவர்டு டீனின் தேர்தல் பிரச்சாரமும்
Advertisement

முதல் சமூக வலைதளமான MeetUp.com ஐ பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்த  ஹாவர்டு டீனின் பிரச்சாரம் குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.

Advertisement

தேர்தல் என்பது ஆயுதங்களற்ற ஓர் சண்டை, இரத்தங்களற்ற ஓர் யுத்தம் என்கிற சொற்றொடர் புழக்கத்தில் உண்டு. அதன்படி தேர்தலில் வெற்றி தோல்விக்கு நடுவே நடக்கும் சண்டையில் தங்களால் இயன்ற எல்லா சாத்தியங்களையும் பிரச்சாரங்களின் வழியாக வேட்பாளர்களும், கட்சிகளும் முன்னிறுத்தும். பழைய பாரம்பரிய பிரச்சார முறையை நவீனப்படுத்தல் தொடங்கி புதிய தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்ளல் வரை அரசியல் கட்சியினருக்கு இது ஒரு மிகப்பெரிய சவால்தான்.

1996 பில்கிளின்டன் , டோலேவின் அமெரிக்க தேர்தலில் முதல் முறையாக இணையதளங்களை உருவாக்கி, ஆன்லைன் போஸ்டர் பிரச்சாரம் செய்ததாகட்டும், 2000ம் ஆண்டில் ஜார்ஜ் புஷ் மற்றும் ஜான் கெர்ரியின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செய்த பிரச்சாரங்களாகட்டும் அந்த காலக்கட்டத்தில் மிகப் பிரபலமாக பேசப்பட்டன. அதனைத் தொடர்ந்து வந்த புதிய தொழில்நுட்பங்களும் தேர்தல்களிலில் எதிரொலித்தன.

2002ல் MeetUp-ன் வருகை :

Meetup எனும் மென்பொருள் செயலி என்பது முதன் முதலில் உருவான ஒரு சமூக வலைதளமாகும். இதன் மூலம் தனிப்பட் அல்லது குழுக்களின் மெய்நிகர் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கலாம் . இந்த மென்பொருள் வழியாக இணையத்தில் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கப்பட்டன.

இந்த மென்பொருள் கடந்த  2002 இல் ஸ்காட் ஹெய்ஃபர்மேன் மற்றும் நான்கு பேரால் ஆரம்பிக்கபட்டது. Meetup தொடங்கப்பட்ட சில மாதங்களுக்குள், 56,000 பயனர்கள் தளத்தில் இணைந்தனர்.  Meetup அதிவேக வளர்ச்சியின் காரணமாக 2003 இல் மீட்அப் "சமூக இணையதளங்கள் மற்றும் மொபைல் தளத்திற்கான வெபி விருதை வென்றது. இதனைத் தொடர்ந்து பல புதிய செயலிகளின் வருகையால் 2017 இல் WeWork ஆல் Meetup கையகப்படுத்தப்பட்டது.

Meetupன் வருகையும் ஹாவர்டு டீனின் தேர்தல் பிரச்சாரமும்

2004ல் அமெரிக்க அரசியலில் இணையம் இன்றியமையாத அங்கமாக மாறியது. முழுவதுமாக 75 மில்லியன் அமெரிக்கர்களில் இளைஞர்கள் 37%  இருந்தனர். அமெரிக்கர்களில் 61% மக்கள் அரசியல் செய்திகள் மற்றும் தகவல்களைப் பெறவும், இணையதளங்களை பயன்படுத்தி தெரிந்துகொள்ளும் நபராக இருந்தனர். வேட்பாளர்களைப் பற்றி விவாதிக்கவும், மின்னஞ்சல்களில் விவாதம் செய்யவும் இணையத்தைப் அதிகளவில் அவர்கள் பயன்படுத்தினர். இணையத்தின் வழியாக அரசியல் செய்திகளை நுகர்வோரின் எண்ணிக்கை  2000 இல் 18% ஆக இருந்து 2004 இல் 29% ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் MeetUp மென்பொருளை தனது தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக ஆரம்பித்தார் அமெரிக்க அதிபர் வேட்பாளரான ஹாவர்டு டீன்.  அவர் Meetup.com மற்றும் நூற்றுக்கணக்கான பதிவர்களின் உதவியுடன்மிகத் தீவிரமாகவும் அதே நேரத்தில் சிறப்பாகவும் அதனை பயன்படுத்திக் கொண்டார். இவர்  ஜனநாயகக் கட்சி வேட்பாளரை விட அதிகளவில் தனது கட்சிக்காக நிதி திரட்ட இணையத்தை பயன்படுத்தினார்.

மேலும் தான் நேரடியாக சென்று வாக்கு சேகரிக்காமல் தனக்காக வீடு வீடாகச் செல்லும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களை ஒழுங்கமைக்கவும், வாக்காளர்களுக்கு தனிப்பட்ட கடிதங்களை எழுதவும், கூட்டங்களை நடத்தவும், ஹாவர்டு டீன் Meetup ஐ  பயன்படுத்தினார். பிப்ரவரி 2003 இல், Meetup.com மூலம் நாடு முழுவதும் 11  பெரிய சந்திப்புகளை டீன் நேரடியாக ஏற்பாடு செய்தார்.  அந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட  800 க்கும் மேற்பட்ட மாதாந்திர கூட்டங்களை MeetUpஐ பயன்படுத்தி நடத்தினார்.

இவை எல்லாவற்றையும் செய்த ஹாவர்டு டீனால் தனது சொந்த கட்சியின் காக்கஸ் தேர்தலில் இருந்து வெற்றி பெற முடியவில்லை. ஜனநாயக கட்சியின் சார்பில் ஜான் கெர்ரி வெற்றி பெற்று அதிபர் வேட்பாளருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் ஜார்ஜ் புஷ் , ஜான் கெர்ரியை வீழ்த்தி அமெரிக்க அதிபரானார்.

தேர்தலுக்கான பேரணியை ஏற்பாடு செய்தல், வாக்காளர்களைப் பதிவு செய்தல் மற்றும் தேர்தல் நாளில் மக்களை வாக்களிக்கச் செல்வது போன்ற பிரச்சாரங்களில் தன்னார்வ நடவடிக்கைகளுக்காக 4 மில்லியன் பேர் ஆன்லைனில் பதிவு செய்தனர். ஜனநாயகக் கட்சியின் ஜான் கெர்ரிக்கு  வாக்களித்ததை விட அதிகமான ஆன்லைன் அரசியல் செய்தி நுகர்வோர் குடியரசுக் கட்சியின் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷுக்கு  வாக்களித்தனர்.

-அகமது AQ

Tags :
Advertisement