‘ரெட்ரோ’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ரெட்ரோ’. இதில் சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்திலிருந்து இதுவரை வெளியான முன்னோட்ட வீடியோ மற்றும் கடந்தாண்டு டிசம்பரில் வெளியான டைட்டில் டீசர் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தில் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியதாக போஸ்டர் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘கண்ணாடி பூவே’ லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் நடப்பு ஆண்டு (2025) மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.