For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'தக் லைஃப்' முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு - ரஷ்யா செல்லும் படக்குழு!

12:37 PM Jan 31, 2024 IST | Web Editor
 தக் லைஃப்  முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு   ரஷ்யா செல்லும் படக்குழு
Advertisement

நடிகர் கமல்ஹாசனின் 234-வது படமான 'தக் லைஃப்'  திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement

நடிகர் கமல்ஹாசனின் 234-வது படம் 'தக் லைஃப்'.  நாயகன் படத்துக்கு பிறகு, கமல்ஹாசன், மணிரத்னம்  ஆகியோர் மீண்டும் இணையும் படம் தக் லைஃப். இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.  ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

இப்படத்தில் ஜெகமே தந்திரம், மதுரம், ஜோசப் போன்ற படங்கள் மூலமாக புகழ்பெற்ற மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.  இதில் துல்கர் சல்மானும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படியுங்கள்: குளியலறையில் ரகசிய கேமரா – மருத்துவ மாணவர் கைது!

'தக் லைஃப்'  படத்தின் அறிமுக விடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.  இப்படத்தின் படப்பிடிப்பு ஜன.24-ம் தேதி துவங்கியது.  இந்த நிலையில்  இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.   இதில் கமல்ஹாசன், ஜோஜு ஜார்ஜ்,  அபிராமி ஆகியோருக்கான காட்சி படமாக்கப்பட்டதாகவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யா செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement